பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் : எடப்பாடி பழனிச்சாமி
பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். கையில் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பனம் வழங்காத திமுக அரசை கண்டிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
திமுக அரசு பொங்கல் தொகுப்பை மட்டுமே அறிவித்திருப்பதாகவும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவோம் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இன்னொரு முகத்துவாரத்தில் பரவிய கச்சா எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அத்துடன் பொங்கல் தொகுப்புக்கான வழங்கப்படுவதில் எவ்வித முறைகேடு இன்றி விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





