ரூ.1,000 வரல.. உங்களுக்கு ஓட்டு போட முடியாது.. அமைச்சரின் காரை வழிமறித்து பெண்கள் ஆவேசம்..!
நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முக்கூடல் பகுதியில் பிரச்சாரம் செய்யச் சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் காரை வழிமறித்த பெண்கள் தங்களில் பலருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை.
குடிநீர் சரியாக வரவில்லை என்று கூறிவிட்டனர். காரிலிருந்து இறங்கி அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் உரிமை தொகை வந்துவிடும் எனக் கூறிவிட்டு அவசர அவசரமாக காரல் ஏறி புறப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் இந்த தேர்தலில் தாங்கள் யாரும் ஓட்டே போட போவதில்லை என்றும் இனிமேல் யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள் என்று ஆவேசமாகினர்.





