--- --:--:-- --

ரவுடி பேபி சூர்யாவின் யூடியூப் பக்கம் முடக்கம்..!

5

யூடியூப் பக்கத்தில் ஆபாசமாக பேசும் ரவுடி பேபி சூர்யாவின் பக்கத்தை முடக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட முதன்மை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவர் ரவுடி பேபி சூர்யா என்பவர் மீது புகார் கொடுத்துள்ளார்.

 

அந்த புகாரில் தனது மகன் மற்றும் மகள் தன்னுடைய செல்போனில் ஆன்லைன் வகுப்புக்காக பயன்படுத்தும்போது ரவுடி பேபி சூர்யா யூடியூப் சேனலில் பொதுத்தளத்தில் ஆபாசமாக பேசுவது அரைகுறை ஆடையுடன் தோன்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

 

மேலும் பொருளாதார உதவி செய்ய பொதுமக்களிடம் பணம் வசூலில் ஈடுபடுவதால் இவரின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் புகார் மனு குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி புகார் மனுவில் உள்ள சூர்யா ரவுடி பேபியின் யூடியூப் பாக்கத்தை முடக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon