ரோகித் ஷர்மா இந்திய அணியில் இணைந்துள்ளார்..!
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 2 வாரம் தனிமைப்படுத்துதலுக்கு பின்னர் இந்திய அணியில் இணைந்தார். ஐபிஎல் போட்டியின்போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை.
இதனிடையே பெங்களூரு பிசிசிஐ சார்பில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கடந்த 16ம் தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்று ரோகித் சர்மா 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இணைந்த காட்சிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.







