முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களின் பணிகளை விரைந்து முடிக்க முடிவு..!
முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களின் பணிகளை பிரதமர் அலுவலக கண்காணிப்பில் விரைந்து முடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பு கொண்ட முக்கிய 50 உட்கட்டமைப்பு திட்டங்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
குறிப்பாக மும்பை, அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டம், டெல்லி – மீரட் இடையிலான விரைவு சாலை புதுடெல்லியில் உள்ள ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய திட்டம் உள்ளிட்டவைகள் இவற்றுள் அடங்கும்.
திட்டங்களில் உள்ள பிரச்னைகளை களைவது குறித்து பிரதமர் அலுவலகத்தில் செயல் அலுவலர் அடங்கிய குழு ஆராய்ந்து வருகிறது.







