--- --:--:-- --

சாலையோரம் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகள்

10

மதுரை அருகே குவியல் குவியலாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெருமாள் மலை அடிவாரப் பகுதியில் காலாவதியான மருந்துகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை பிளாஸ்டிக் பைகளில் வைத்து குவியல் குவியலாகக் கொட்டப்பட்டுள்ளது.

 

10 கிராம மக்கள் பயன்படுத்தும் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள இந்த மருத்துவக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக மருத்துவ கழிவுகளை அகற்றுவது உடன் மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது தொடர்பாக ஒத்தக்கடை காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon