--- --:--:-- --

கனமழையால் திருச்சியில் திடீர் திடீரெனப் பிளந்த சாலைகள்..!

2

திருச்சியில் அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடை பணிகளால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது.

 

இந்த மழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் 27 சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளது.

 

அவசரகதியில் மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடை பணிகளால் சாலை சேதம் அடைந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆங்காங்கே சுமார் இரண்டு அடி ஆழத்திற்கு பள்ளம் உள்ளது என்றும் தார் சாலைகள் உள்வாங்கியுள்ளன என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon