--- --:--:-- --

திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் அசைவம் சமைக்க தடை – ஆணையர் விளக்கம்

3

வைகாசி விசாக விரதத்தை முடிப்பதற்காக திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

வைகாசி விசாகத் திருவிழாவிற்காக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும் காவடி எடுத்து வருவது வழக்கம். விரதம் மேற்கொண்டு வரும் அவர்கள் விரதம் முடிவடைந்த பிறகு கோயில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்கள். இந்தாண்டு கோயில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள கோயிலில் அசைவம் சாப்பிடுவது ஆத்ம விதிகளுக்கு எதிரானது என்பதால் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆணையர் கூறியுள்ளார்.

 

Right Menu Icon