--- --:--:-- --

தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

1

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில், இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார். மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

2024-ஆம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஒன்று புள்ளி 88 மீட்டர், அதாவது ஆறு புள்ளி ஒரு அடி உயரத்துக்கு தாண்டி அசத்தினார்.

 

இதன் மூலம் மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.மாரியப்பனுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வருங்காலத்தில் இதுபோன்ற இன்னும் பெரிய உயரங்களை எட்டவேண்டும் என்று வாழ்த்து கூறியுள்ளார். அவரது சாதனை வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Right Menu Icon