திருவாடனை ஆதியூர் கிராம குடியிருப்புக்குள் வெள்ளநீர் புகும் அபாயம்
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
திருவாடானை தாலுகா ஆதியூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகில் இளையான்குடி கண்மாய் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக இந்த கண்மாய் முழு கொள்ளளவை எட்டி உபரி நீ்ர் வெளியேறுகிறது.
அதனால் கண்மாயின் அருகில் உள்ள விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால், குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் இளையான்குடி கிராமத்தைச் சேர்ந்த சிலர் தங்களது கண்மாய் தண்ணீர் வீணாகிறது என்று கூறி மீண்டும் அடைத்து விட்டார்கள். இதனால் இரண்டு கிராமங்களுக்கும் இடையே ஒரு வித பதட்டம் ஏற்பட்டது. இன்று ஆதியூர் கிராம மக்கள் திருவாடானை தாசில்தார் செந்தில்வேல்முருகனிடம் புகார் மனு கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
-செய்தியாளர் எல்.ஆனந்த்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




