சீனாவில் சிறுவனை முதுகில் ஏற்றி வெள்ளத்தில் இருந்து மீட்ட மீட்பு படை வீரர்..!
சீனாவின் சான்சி மாகாணத்தில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததையடுத்து மீட்பு படை வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது சிறுவன் ஒருவனை தன்னுடைய முதுகில் ஏற்றிக் கொண்ட மீட்பு படை வீரர் ஒருவர் சீறிப்பாயும் ஆற்று வெள்ளத்தில் கயிற்றின் உதவியுடன் கடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.







