ஆதரவின்றி சாலையில் தவித்த மூதாட்டி மீட்பு..!
மயிலாடுதுறையில் ஆதரவின்றி சாலையில் தவித்த மூதாட்டியை ஒருவர் பத்திரமாக குடும்பத்தாருடன் சேர்த்து வைத்தார். திருவாரூர் மாவட்டத்தில் 80 வயது மூதாட்டி கணவன் மற்றும் மகன் ஆகியோர் இருக்கும் நிலையில் தனியே வசித்து வருகிறார்.
குடும்பத்தாருடன் ஏற்பட்ட மன அழுத்தத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மயிலாடுதுறைக்கு அருகே சென்ற அவர் அங்கு சாலையோரம் இருந்தார். விவரங்களை கேட்டறிந்து அவரது குடும்பத்தினரை வரவழைத்து மூதாட்டியை ஒப்படைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





