காதலை ஏற்க மறுத்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர்..!
தெலுங்கானாவில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். தெலுங்கானா மாநிலத்தில் ரோகித் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த பெண் உடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
நாளடைவில் அந்த பெண் மீது காதல் வயப்பட்டு அவரிடம் தெரிவித்துள்ளார். பலமுறை தனது காதலை தெரிவித்தும் இளம்பெண் ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
அதில் படுகாயமடைந்த இளம் பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பெண்ணை கத்தியால் குத்தியதில் அவரை கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




