--- --:--:-- --

வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்கை ரத்து செய்ய கோரிக்கை!

12

தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக எம்பிக்கள் டி ஆர் பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அண்மையில் திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், டி‌ஆர் பாலு திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை தலைமை செயலாளரை சந்தித்து வழங்கினார்.

 

பின்னர் பேட்டியளித்த அவர்கள் தலைமை செயலாளர் தங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினர் என்றும், தாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா என்றும் கூறியிருந்தனர்.

 

இதையடுத்து தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி கோவையை சேர்ந்த சேகர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை வரைட்டி ஹால் காவல்நிலையத்தில் தயாநிதிமாறன், டி ஆர் பாலு உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி சம்பந்தப்பட்ட நீதிபதி விசாரிக்க ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இருவரது மனுக்களையும் நீதிபதி நிர்மல்குமார் விசாரிக்க உள்ளார்.

Leave a Reply

Right Menu Icon