செங்கல் சூளையில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே தனியார் செங்கல் சூளையில் உயிரிழந்த தொழிலாளர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல் சூளையில் பணியாற்றிவந்த சீனிவாசன் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
தூக்கில் தொங்கிய அவரது உடலை மீட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செங்கல் சூளை உரிமையாளர்கள் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி வரும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து 5வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.







