ஊராட்சி மன்ற தலைவருக்கும் பெண் விஏஓக்கும் உள்ள தவறான தொடர்பு..!
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி யில் பெண் விஏஓ மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் இருந்த வீட்டை பூட்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த கிராமத்தை சேர்ந்த வித்யா என்பவர் சொக்கநாதபுரம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அதே கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் கண்ணன் என்பவருக்கும், வித்யாவிற்கும் இடையே நீண்ட நாட்களாக தவறான தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று வித்யா மற்றும் கண்ணன் இருவரும் மதகுபட்டி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து வித்தியாவின் கணவர் மற்றும் மக்கள் அங்கு சென்றனர்.
பின்னர் அவர்களை கையும் களவுமாக பிடித்ததுடன் வீட்டை பூட்டி சிறை வைத்தனர். இதனை அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் மீட்டனர்.
பின்னர் வித்தியாவை காப்பகத்திற்கு அனுப்பிய போலீசார் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக மக்களிடம் உறுதியளித்தனர்.







