உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப கல்வித்துறை அமைச்சர் கமல் ராணி கொரொனாவுக்கு பலி..!
கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப கல்வித்துறை அமைச்சர் கமல் ராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 62 வயதான அவர் தலைநகர் லக்னோவில் உள்ள ராஜதானி மருத்துவமனையில் ஜூலை 18ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். கமல் ராணி மறைவுக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கமல் ராணி இரண்டு முறை மக்களவை எம்பியாக இருந்து உள்ளதாகவும் அமைச்சராக பணியாற்றிய காலத்திலும் கமல் ராணி சிறப்பாக பணியாற்றியதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அயோத்தியில் இன்று மேற்கொள்ளவிருந்த பயணத்தையும் அவர் ரத்து செய்துவிட்டார்.







