திருப்பூர் ஊர்க்காவல் படைக்கு ஆள்சேர்க்க விண்ணப்பம்..!
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள ஊர்க்காவல்படை ஆண், பெண் ஆளிநர்கள் பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்களை ஊர்க்காவல் படை அலுவலகம், வடக்கு காவல் நிலையம் பின்புறம், குமரன் ரோடு, திருப்பூர்-641601 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:
கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி.
* வயது வரம்பு 20 வயதிற்க்கு மேற்பட்டவராகவும் 45 வயதிரற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
* இருப்பிடம் திருப்பூர் மாநகர எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
உடல் தகுதி : நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் ஊர்க்காவல்படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். அலுவலக நேரம் : காலை 10.00 முதல் மாலை 06.00 வரை. விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி 21.10. 2024 என தெரிவிக்கப்பட்டுள்ளது.





