இன்று முதல் ஜூன் 9-வரை ரேஷன் கடைகள் ஸ்ட்ரைக்..!
இன்று முதல் வரும் ஒன்பதாம் நாள் வரை மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக நியாயவிலை கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 9 ஆம் நாள் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக நியாய விலைக்கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்கள் இனி ஊதியத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விபரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதிலாக மாற்று பணியாளர்களை கொண்டு ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் எனவும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.





