ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்க இருப்பு வேண்டும்..!
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்க இருப்பு வைத்திருக்க வேண்டிய இடம், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ஆனந்த் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் துறை அதிகாரிகளுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் அதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய உரிய நேரத்தில் கடைகள் திறக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பொருட்களை வாங்க வரும் மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியை பின்பற்றி சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரே தவணையில் பொருட்கள் வழங்க வேண்டுமென்றும் எந்த காரணம் கொண்டும் திருப்பி அனுப்பக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் இருப்பதை கண்காணிப்பாளர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






