--- --:--:-- --

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தா?

5

கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரொனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பொதுத் தேர்வு ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் கொரொனாவை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களின் நலன் கருதி காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon