சட்டப்பேரவைக்கு உரையாற்று வாருங்கள் தமிழிசைக்கு ரங்கசாமி நேரில் அழைப்பு..!
புதுச்சேரியில் சட்டப்பேரவையில் உரையாற்ற வருமாறு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
புதுச்சேரி சட்டமன்ற தொகுதி பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் கூட்டம் தொடங்கும்.
இதனை முதல்வர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து சட்டமன்றத்தில் உரையாற்ற வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.






