நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவிப்பு..!
மருத்துவமனையில் இருக்கும் பொழுது நலன் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். தான் மருத்துவமனையில் இருக்கும் பொழுது விரைவாக உடல் நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் தனித்தனியாக நன்றி தெரிவித்துள்ளார். இதயத்திற்கு செல்லும் ரத்தநாள வீக்கத்திற்காக தனியார் மருத்துவமனையில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்றார்.
30ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் மூன்று நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்.






