--- --:--:-- --

கர்ப்பிணி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி

5

கர்ப்பிணி பெண்ணின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அந்தப் பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் வளைகாப்பு வளையல் அணிவித்து இருக்கிறார்.

 

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ராகவா விக்னேஷ் அவரது மனைவி ஜெகதீஸ்வரி நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள். தர்பார் படத்தின் ஷூட்டிங் கடைசி நாளில் ராகவா விக்னேஷ் தனது கர்ப்பிணி மனைவியோடு ரஜினியை சந்தித்து இருக்கிறார்.

 

அப்போது தந்தை ஸ்தானத்தில் இருந்து தனக்கு வளைகாப்பு வளையல் அணிவிக்கும்படி ஜெகதீஸ்வரி கேட்டிருக்கிறார். உடனே ரஜினிகாந்த் வளைகாப்பு வளையல் வாங்கி கர்ப்பிணி ஜெகதீஸ்வரிக்கு அணிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரை நெகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon