தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை..!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.
கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மானாவாரி பயிர்கள் செழிக்கும் என்பதால் தாளவாடி மலைக்கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகரம், கீரமங்கலம், கீரனூர், திருவரங்குளம், உடயன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால் நிலவிய கடுமையான சூழல் காரணமாக மக்கள் மகிழ்ந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் திருவையாறு சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று இரவு மழை பெய்துள்ளது.
குருவை நெல் பயிரிட்டு வாய்க்காலில் தண்ணீருக்காக காத்திருந்து ஏமாந்த விவசாயிகள் போதிய மழை இல்லாததால் தவித்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் அவர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.







