அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு..!
சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு வட கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டியுள்ள ஒரு மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே நீலகிரி கோவை மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவ் புயலானது வலு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நாளை வட கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு வர உள்ளது.
இது மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஒரிசா மற்றும் மேற்குக் கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இதனால் வங்கக்கடலில் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்ற மீனவர்கள் இன்று கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மன்னார் வளைகுடா கடல் அந்தமான் கடற்பகுதியில் 4 மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






