--- --:--:-- --

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

6

மிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் திருவாரூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon