கருப்பு பூஞ்சை குறித்து மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி..!
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சையை ஒழிப்பதற்கான முறைகள் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மூன்று கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.
அதில் மருந்து பற்றாக்குறையை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நோயாளி ஒருவர் இந்த மருந்தை பெறுவதற்கு என்ன நடைமுறை எப்படி பெறுவது என்று இரண்டாவது கேள்வியை எழுப்பி இருக்கும் அவர் சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக வழிமுறைகள் என்ற பெயரில் மக்களை அலைக்கழிப்பது ஏன் என்றும் வினவியுள்ளார்.
இந்த மூன்று கேள்விகளுக்கும் மத்திய அரசு பதில் தர வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.






