--- --:--:-- --

நாட்டை வழிநடத்தும் தலைவராவதில் ராகுல் காந்திக்கு இன்னும் பக்குவம் வரவில்லை..!

3

நாட்டை வழிநடத்தும் தலைவராவதில் ராகுல் காந்திக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எழுதிய சுயசரிதை நூலில் ராகுல்காந்தி பதற்றமானவர், பக்குவப்படாமல் இருக்கிறார் என குறிப்பிட்டிருந்தார்.

 

இதற்கு காங்கிரசின் கூட்டணி கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்திய நாட்டு தலைவரை பற்றி வெளிநாட்டு தலைவரான ஒபாமா கருத்து கூறியதை கடுமையாக கண்டித்தது.

 

இந்த நிலையில் அதே வேளையில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாட்டை வழி நடத்தும் தலைவர் ஆவதில் ராகுல் காந்திக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon