நேர்மையாக இருப்பதால் துணைவேந்தர் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை..!
வளைந்து கொடுக்காமல் நேர்மையாக இருப்பதால் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதா என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடு குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள மற்றவர்கள் மீது விசாரணை முடிந்துவிட்டதா என்றும் கேட்டுள்ளார். நேர்மையானவர்கள் வேட்டையாடப்படும் வரை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
நேர்மையான ர்களின் கூடாரமான மக்கள் நீதி மையமும் சும்மா இருக்காது எனவும், இது ஒரு கல்வியாளர் அரசியல்வாதிகளுக்கும் இடையேயான பிரச்சினை இல்லை என தெரிவித்துள்ளார். நேர்மையானவர்களுக்கும் ஊழல் பேர்வழிகளுக்கும் இடையேயான எனவும் அவர் கூறியுள்ளார்.






