விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி மற்றொரு விபத்து..!
தெலுங்கானா மாநிலம் சிந்தி பேட்டையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இன்று காலை சிந்தி பேட்டை புறநகர் சாலையில் கார் ஒன்று தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் வந்த மூன்று பேரும் உயிரிழந்த நிலையில் அவர்களை மீட்கும் பணியில் போலீசாரும், பொதுமக்களும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கரீம் நகரில் இருந்து அந்த வழியாக வந்த லாரி சாலையில் கூட்டமாக நின்றிருந்தவர்கள் மீது திடீரென்று மோதியது. அங்கு கூட்டத்தில் நின்றிருந்த நபர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய நிலையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆய்வாளர், காவலர் உட்பட 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுனரை கைது செய்து விபத்து ஏற்படுத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.






