தேர்வுக்கு முன்பே சமூக வலைதளங்களில் வெளியான வினாத்தாள்
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பத்தாம் வகுப்பு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் புகார் எழுந்துள்ளது. தேர்வு நடை பெறுவதற்கு முன்பாகவே சமூகவலைதளங்களில் வினாத்தாள் வெளியானதாக ஆசிரியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாளுடன் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வினாத்தாள் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே ஷேர் சாட்டில் வெளியான தாகவும் இன்று நடைபெறும் அறிவியல் வினாத்தாள் ஹலோ என்ற செயலியில் வெளியான தாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் சிலரிடம் பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காலாண்டு தேர்விலும் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அச்சடித்த வினாத்தாளை அனுப்புவதற்கு பதிலாக குறுந்தகடுகள் மூலமாக வினாத்தாளை அனுப்ப அரசு தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் வினாத்தாள் வெளியாவதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன.





