வசூல் வேட்டையாடும் ‘புஷ்பா-2’
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா-2’ பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்து வருகிறது. படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ₹829 Cr வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் அதிவேகமாக ₹800 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. கடந்த 4 நாட்களாக அதிகளவில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தெலங்கானாவில் இன்று முதல் கட்டணம் சற்று குறைக்கப்பட்டுள்ளது.





