பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் ஒத்திவைப்பு..!
பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவிருந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 20ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தன. எனவே பிப்ரவரி 14ம் தேதி நடைபெற இருந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.






