--- --:--:-- --

வக்பு திருத்த சட்டம் கொண்டு வந்த ஒன்றிய அரசை கண்டித்து           பள்ளிவாசல் முன்பு கருப்புபேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்..!

12.1

திருப்பூர் வடக்கு மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் வக்பு திருத்த சட்டம் கொண்டு வந்த பாசிச ஒன்றிய அரசை கண்டித்து திருப்பூர் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்தவுடன் கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் அந்தந்த பள்ளிவாசல்கள் முன்பு நடந்தது.

திருப்பூர், அனுப்பர்பாளையம்புதூர் மஸ்ஜிதே சித்திக் ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் சார்பில் அனுப்பர்பாளையம் சந்தை பேட்டை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பள்ளிவாசல் ஹஜ்ரத் அப்துல் வகாப் தலைமை தாங்கினார். பள்ளிவாசல் தலைவர் முபாரக் முன்னிலை வைத்தார்.

வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்த கையோடு சுமார் 600 க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி கருப்பு பேட்ச் அணிந்து ஒன்றிய அரசுக்கு எதிராக எச்ரிக்கிறோம். எச்சரிக்கிறோம். அநியாய சட்ட திருத்தத்தை திரும்ப பெற எச்சரிக்கிறோம். வாபஸ் வாங்கு வாபஸ் வாங்கு. வக்பு திருத்த சட்டத்தை வாபஸ் வாங்கு. பாழாக்காதே, பாழாக்காதே. இந்தியாவின் பன்முகத்தன்மையை பாழாக்காதே. காப்பாற்றுவோம், காப்பாற்றுவோம். அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றுவோம். செய்யாதே, செய்யாதே. வெறுப்பு அரசியல் செய்யாதே., அபகரிக்காதே, அபகரிக்காதே. வக்பு சொத்தை அபகரிக்காதே. எதிர்ப்போம், எதிர்ப்போம். கடைசி மூச்சு வரை எதிர்ப்போம். திணிக்காதே, திணிக்காதே. இஸ்லாமியர்கள் மீது வன்மத்தை திணிக்காதே. அடிபணியோம், அடிபணியோம். நாங்கள் அடக்கு முறைக்கு அடிபணியோம். மன்னிக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்.

 

துணை போன துரோகிகளை மன்னிக்க மாட்டோம். வீழும் வீழும், அநீதி வீழும். வெல்லும் வெல்லும் நீதி வாழும்  என்று கோஷமிட்டனர். அதேபோல் திருப்பூர் ஐக்கிய ஜமாத் நடத்தும் வக்பு திருத்த சட்டம் கொண்டு வந்த பாசிச ஒன்றிய அரசை கண்டித்து நமது திருமுருகன்பூண்டி மஸ்ஜிதுன் நபவி ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத்தார்கள் சார்பில் ஜும்மா தொழுகைக்கு பிறகு பள்ளிவாசல் முன்பு கண்டன கோஷம் எழுப்பப்பட்டது . இதில் 150 க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர் .

Right Menu Icon