--- --:--:-- --

சர்வ கட்சி மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

1

ர்வ கட்சி மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டம் சார்பில் ரயில் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்ச்சி திமுக வடக்கு மாநகர மாணவரணி அமைப்பாளர் திலகராஜ் தலைமையில் நடைபெற்றது.

 

இதில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது, ஆர்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர். அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் தோழர் முத்துக்குமார், திமுக வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கோபிநாத், இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் பிரவீன் குமார்,
மாநில செயற்குழு சாலினி, இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் சந்தீப், மதிமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சங்கர் கணேஷ், முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் முகமது முஃபிஸ், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கலையழகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் வெங்கடேஷ், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மிதிலேஷ், எஸ்எஃப்ஐ மாவட்ட தலைவர் கல்கிராஜ், சமூக நீதி மாணவர் இயக்கம் மண்டல செயலாளர் ஆசிப், திராவிடர் கழகம் மாவட்ட மாணவரணி தலைவர் சூர்யா நன்றி உரையாற்றினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon