சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ..!
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் சமீப காலமாக நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பட்டியலிட்டு அவர் பேசினார். திமுக எம்பி, கனிமொழி ஏன் வாய் திறக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





