14 வயது சிறுமியை வீட்டில் பூட்டி வைத்து 3 நாட்களாக பாலியல் தொல்லை..!
14 வயது சிறுமியை வீட்டில் பூட்டி வைத்து மூன்று நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலையை சேர்ந்த 14 வயது சிறுமி சென்னையில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தனது காதலனை பார்க்க தஞ்சைக்கு சென்றுள்ளார். அப்பொழுது தனது காதலியை பார்ப்பதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த சிறுமியை புவனேஸ்வரன் என்பவர் ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
மேலும் சிறுமியை மூன்று நாட்களாக வீட்டில் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் புவனேஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியின் காதலன் ஜெகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.





