தஞ்சையில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு..!
தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் மாணவியின் மரணம் குறித்து சர்ச்சைகள் எழுந்தன. இது தொடர்பாக மாணவியின் பெற்றோரிடம் உதவி காவல் கண்காணிப்பாளர் 2 மணிநேரம் விசாரணையில் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாணவியின் சித்தி தங்கள் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் அவரது உடலை வாங்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிட கோரி மாணவியின் தந்தை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் .
இதனை விசாரித்த நீதிபதி எவ்வித புகாரும் இடமளிக்காத வகையில் திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் வழக்கை விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





