ரயிலில் சத்தம் போட்டு பேசினால் பாட்டு கேட்டால் அபராதம்..!
வயலுக்குள் சத்தமாக பாட்டு கேட்பதோ செல்போனில் சத்தமாக பேசவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதர பயணிகளுக்கு தொல்லை தரும் செயல்களுக்கு ரயில்வே தடையும் அபராதமும் விதித்துள்ளது. இதற்கான புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன .
எந்த ஒரு பயணியும் அசௌகர்யம் ஏற்பட்டதாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க ரயில்வே போலீசார், டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே ஊழியர்களுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது .இரவு 10 மணிக்கு மேல் விளக்குகளை எரிய விடக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.





