கல்விக் கட்டணம் செலுத்தாத 13 மாணவிகளை நீக்கிய தனியார் பள்ளி..!
திண்டுக்கல்லில் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி 13 மாணவிகளை ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கியதாக தனியார் பள்ளி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நத்தம் சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின. இதில் இந்த பருவத்திற்கான கல்வி கட்டணமாக 27 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என பள்ளி நிர்வாகம் ஏற்கனவே கூறியதாக தெரிகிறது.
ஊரடங்கு காரணமாக கட்டணத்தை செலுத்த பெற்றோர் அவகாசம் கோரியதாகத் தெரிகிறது. ஆனால் கட்டணம் செலுத்தாத 11 மாணவிகளை பள்ளி நிர்வாகம் நீக்கியதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
பள்ளி செயல்படாத நிலையில் பேருந்து கட்டணம், பள்ளி கட்டணம் உள்ளிட்டவற்றிற்கும் சேர்த்து பணம் வசூலிப்பதாகவும் அவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.






