சி.வி.சண்முகம் வீட்டில் தனி ஆலோசனை..!
லீமா ரோஸ், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர உள்ளிட்ட பல எம்.எல்.ஏக்கள் சிவி சண்முகம் உடன் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி எந்த முடிவும் எடுக்காமல் இருந்ததால் தனி ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவி சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 4 பேர் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஈபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 5 எம்எல்ஏகள் பங்கேற்காத நிலையில் தனி ஆலோசனை கூட்டம் நடைபெறுவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.





