இளவரசர் பிலிப்பின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!
மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இங்கிலாந்து ராணி எலிசபெத் ராணியின் கணவர் பிலிப்.வயது முதிர்வு காரணமாககடந்த 9ஆம் தேதி காலமானார்.
அரசு குடும்ப வரலாற்றில் இளவரசராக இருந்து வந்த பெருமைக்குரியவர். இந்த நிலையில் மறைந்த இளவரசர் பிலிப் பின் இறுதி சடங்கு நேற்று வில்சன் கோட்டை வளாகத்தில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. முன்னதாக வில்சன் கோட்டையில் இருந்த அவரது உடல் ஊர்வலமாக தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இளவரசர் பிலிப் வடிவமைத்த காரில் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் இளவரசர் ஹாரி மற்றும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இறுதி அஞ்சலிக்குப் பிறகு இளவரசனுடன் தேவாலயத்தில் உள்ள பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் ஆயுதப்படை நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






