--- --:--:-- --

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

1

பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றபிறகு, முதன்முறையாக வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு நரேந்திர மோடி வருகை தரவுள்ளார். தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டில் அடிக்கடி வருகை தந்த பிரதமர் மோடி, கடைசியாக தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக கன்னியாகுமரிக்கு வந்து மூன்று நாட்கள் தியானம் மேற்கொண்டார்.

 

பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில், பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றார். இந்நிலையில், ரயில்வே திட்டங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 19-ஆம் தேதி சென்னைக்கு வருகை தரவுள்ளார்.

 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் வரை வந்தே பாரத் ரயில் சேவையை அவர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

 

தமிழக பாஜகவில் தேர்தலுக்கு பின்னர் சில சலசலப்புகள் உருவாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக பிரதமரை கட்சி நிர்வாகிகள் சந்தித்துப் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon