--- --:--:-- --

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தை..!

1

ந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிரதமர் மோடியுடன் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

 

பாதுகாப்பு, கொரொனா தடுப்பில் ஒத்துழைப்பு, பருவநிலை மாற்றம் பிரச்சினை உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விரைவாக விவாதித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

இந்திய-அமெரிக்க உறவுகளை பலப்படுத்த அதிபர் பைடன் மேற்கொண்ட முயற்சிகளை வரவேற்பதாக பிரதமர் மோடி தன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை வெளியேறும் நிலையில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் ஆண்டனி பேசினார். பைடன் அரசு இரண்டாவது முக்கிய தலைவராகத் திகழும் கிளிண்டனின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon