--- --:--:-- --

வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

13

வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

அதன்படி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

 

திண்டுக்கல், தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் வடமேற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon