முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை ஒட்டி பிரதமர் மோடி புகழாரம்..!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை ஒட்டி அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். அவருக்கு தமிழக ஆளுநர் மூத்த அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சியினர் மரியாதை செலுத்துகின்றனர்.
முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60 ஆவது குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. முத்துராமலிங்க தேவரின் கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமூக மேம்பாடு. விவசாயிகளின் நலன், வறுமை ஒழிப்பு, முத்துராமலிங்கத் தேவர் பங்களிப்பை நினைவு கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். ராஜ் பவனில் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.





