--- --:--:-- --

பிரதமர் மோடி இன்று முதலமைச்சர்களுடன் ஆலோசனை ..!

1

கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் அதிக பாதிப்பு நிலவும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டாம் அலை கடும் வேகமாக பரவி வருகிறது.

 

பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தான் பாதிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களைச் சேர்ந்த முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காலை 10 மணிக்கு உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறார்.

 

முதலமைச்சர்கள் உடனான ஆலோசனைக்குப் பின்னர் மதியம் 12.30 மணிக்கு நாட்டின் முன்னணி ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் ஆய்வு மேற்கொள்கிறார். இன்றைய மேற்குவங்க தேர்தல் பரப்புரை ரத்து செய்துவிட்டு ஆலோசனை கூட்டங்களை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon