18 வயதுக்கு மேற்பட்டோர் கொரொனா தடுப்பூசி போட வரும் 28 ஆம் தேதி முதல் முன்பதிவு..!
18 வயதுக்கு மேற்பட்டோர் கொரொனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வரும் 28-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொரொனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மூன்றாம் கட்டமாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அறிவித்தது.
இந்த நிலையில் 18 வயது நிரம்பியோர் தடுப்பூசி செலுத்தினால் வரும் 28ஆம் தேதி முதல் கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 24-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என்றும் தகவல் வெளியானது. இந்தியாவில் இதுவரை 13 கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.






