மகாராஷ்டிராவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 நோயாளிகள் பலி..!
மகாராஷ்டிராவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 நோயாளிகள் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பாஸ் என்ற இடத்தில் உள்ள கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவந்தனர்.
அங்கு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 12 பேர் இறந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற நோயாளிகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றி விட்டதாகவும் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புக்கு பிறகுதான் மேலும் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து தெரியவரும்.






